மாவட்ட செய்திகள்

வீணானப் பொருட்கள்.. ஆரோக்கிய உணவு.. + "||" + Waste products .. health food ..

வீணானப் பொருட்கள்.. ஆரோக்கிய உணவு..

வீணானப்  பொருட்கள்.. ஆரோக்கிய  உணவு..
இங்கிலாந்தின் லிவர்பூலில் ‘ஜங்க் புட் கபே’ என்ற உணவு விடுதியை நடத்தி வருகிறார்கள், நடாலி க்ரியன் மற்றும் கப்பி ஹோல்ம்ஸ் என்ற பெண்கள்.
ங்கிலாந்தின் லிவர்பூலில் ‘ஜங்க் புட் கபே’ என்ற உணவு விடுதியை நடத்தி வருகிறார்கள், நடாலி க்ரியன் மற்றும் கப்பி ஹோல்ம்ஸ் என்ற பெண்கள். இந்த உணவு விடுதியில் கிடைக்கும் உணவுகள் அனைத்துமே, வீணானப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டவை. இருப்பினும் இங்குள்ள உணவு வகைகள் அனைத்தும் ஆரோக்கியமாகவும், சுவையாகவும் இருக்கின்றன.

‘உலகில் ஆண்டுக்கு 1.3 பில்லியன் டன் உணவுப் பொருட்கள் வீணாகின்றன. அதே நேரம் 4 நொடிகளுக்கு ஒருவர் பசியால் மரணம் அடைகிறார். இது எவ்வளவு மோசமான வி‌ஷயம்? அதற்காகத்தான் வீணாகும் உணவுப் பொருட்களுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்திருக்கிறோம். மளிகைக் கடைகள், பெரிய உணவகங்கள், சூப்பர் மார்க்கெட்களில் வீணாகும் பொருட்களை வாங்கிக்கொள்கிறோம். அவற்றைக் கொண்டு சுவையான உணவுகளைத் தயாரிக்கிறோம். இங்கு வரும் ஏழைகள் சாப்பிட்டுவிட்டு, அவர்களால் முடிந்ததைக் கொடுத்துவிட்டுச் செல்லலாம்’ என்கிறார் நடாலி.

தற்போது வார இறுதிகளில் மட்டும் இயங்கி வரும் இந்த விடுதி, வெகு விரைவில் முழுநேர விடுதியாக மாற இருக்கிறது. நிறைய பேர் இவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு நன்கொடை அளிக்க முன்வருகிறார்கள். இருப்பினும் தோழிகள் யாரிடமும் பணம் பெற்றுக்கொள்வதில்லை. உணவுப் பொருட்களாக மட்டுமே வாங்கிக்கொள்கிறார்கள். இந்த விடுதியில் இவர்கள் இருவர் மட்டுமே வேலைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.