பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல்


பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 13 Oct 2017 4:30 AM IST (Updated: 12 Oct 2017 8:13 PM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த காந்திநகர் பகுதி வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் மெயின் ரோட்டில் உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் தினமும் 100–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் காலையில் போளூரில் இருந்து வரும் பி6 என்ற அரசு நகர பஸ் மூலம் கண்ணமங்கலம் வந்து, அங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்சில் செல்கின்றனர்.

போளூரில் இருந்து கண்ணமங்கலத்திற்கு வரும் அந்த பஸ் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வரவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

இந்த நிலையில் நேற்று காலை பி6 பஸ் போளூரில் இருந்து கண்ணமங்கலம் நோக்கி வந்தபோது 7.30 மணி அளவில், காந்திநகர் பஸ் நிறுத்தத்தில் அந்த பஸ்சை மாணவ, மாணவிகள் மறறும் பொதுமக்கள் சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கடந்த 15 நாட்களாக பஸ் இயக்கப்படாதது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், போக்குவரத்துக்கழக அலுவலர்களிடம் பேசி, தினமும் பஸ்சை இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவ – மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சை விடுவித்தனர். பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Next Story