காய்ச்சல் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டுகள் தொடக்கம்
காய்ச்சல் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டன. அப்போது பேட்டி அளித்த கலெக்டர் ரோகிணி, காய்ச்சல் தொடர்பாக இலவச சேவை எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம், என்றார்.
சேலம்,
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் டெங்கு மற்றும் இதர காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவதால் 24 மணி நேரமும் டாக்டர் குழுவினர் பணியில் இருந்து அவர்களை கவனித்து வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் வகையில் ஏ.சி.வசதியுடன் கூடிய சிறப்பு மருத்துவ வார்டு நேற்று முதல் தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்.
மேலும், அவர் காய்ச்சல் அவசர உதவி எண் (1800-425-2424) மையத்தையும் தொடங்கி வைத்தார். பின்னர், இலவச சேவை எண்ணிற்கு கலெக்டர் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் டெங்கு மற்றும் இதர காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருபவர்களை கலெக்டர் ரோகிணி பார்வையிட்டு, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டீன் கனகராஜ் மற்றும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் இதர காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக கொசு ஒழிப்பு பணி, பிளச்சிங் பவுடர் தெளித்தல், கொசு மருந்து அடிக்கும் பணி ஆகியவை தீவிரமாக நடந்து வருகிறது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் சிகிச்சை பெற்று வருவதால் 22 சிறப்பு டாக்டர்களும், 50 நர்சுகளும் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
காய்ச்சல் பாதித்த 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக ஏ.சி.வசதியுடன் கூடிய 20 படுக்கைகள் கொண்ட 2 சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டு உள்ளன. மேலும், காய்ச்சல் அவசர உதவி மையம் 24 மணி நேரம் செயல்படும். இந்த மையத்தில் 2 டாக்டர்கள் பணியில் இருப்பார்கள். இதற்காக இலவச சேவை எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த இலவச சேவை தொலைபேசி எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொண்டு காய்ச்சல் சம்பந்தமான ஆலோசனைகளை பெறலாம்.
சேலம் மாவட்டத்தில் கொசு ஒழிக்கும் பணியில் 20 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.

Related Tags :
Next Story