பழனியில் மர்ம காய்ச்சலுக்கு மாணவன் பலி


பழனியில் மர்ம காய்ச்சலுக்கு மாணவன் பலி
x
தினத்தந்தி 13 Oct 2017 4:15 AM IST (Updated: 13 Oct 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியானான்.

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் 5-வது வார்டை சேர்ந்தவர் செல்வம். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் ஹரிவிஷ்ணு (வயது 8). இவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக ஹரிவிஷ்ணு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தான்.

இதையொட்டி அவனை ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலையில் அவன் பரிதாபமாக இறந்தான்.

சாவு எண்ணிக்கை உயர்வு

பழனி பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை காய்ச்சலுக்கு 21 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பழனி நகர மக்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பழனி நகர் முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள் ளது. எங்கு பார்த்தாலும் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளது. மர்ம காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அன்று மட்டும் அப்பகுதியில் சுத்தம் செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் குப்பைகளை அள்ளுவதே கிடையாது. சாக்கடை கால்வாய் களை தூர்வாருவதும் இல்லை. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


Related Tags :
Next Story