திண்டுக்கல்லில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்,
திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையின் 2-வது கிளை முன்பு, சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு, சி.ஐ.டி.யு. கிளை தலைவர் பீட்டர் சகாயராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மத்திய சங்க துணை தலைவர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். பிரேக் பிடிக்காத பஸ்களை இயக்க சொல்லும் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், பஸ்களை பராமரிக்க தேவையான தொழிலாளர்கள், உதிரி பாகங்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story