டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிகளில் போதிய டாக்டர்கள் இல்லை கருணாஸ் குற்றச்சாட்டு


டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிகளில் போதிய டாக்டர்கள் இல்லை கருணாஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Oct 2017 4:30 AM IST (Updated: 13 Oct 2017 1:39 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய டாக்டர்கள் இல்லை என கருணாஸ் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.

அவனியாபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நேற்று விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் எனது உறவினரின் மகள் மற்றும் ஒரு சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு பாதிப்பால் 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய டாக்டர்கள் இல்லை. மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ வசதியும் இல்லை.

எனவே ஆஸ்பத்திரிகளில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

தமிழக அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story