வால்பாறையில் தொடரும் அட்டகாசம்: சத்துணவு கூடம்- வீடுகளை சேதப்படுத்திய காட்டுயானைகள்

வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதியில் புகுந்த காட்டுயானைகள் அங்குள்ள சத்துணவு கூடம்- வீடுகளை சேதப்படுத்தின.
வால்பாறை,
வால்பாறை பகுதியில் தொடர்ந்து காட்டுயானைகள் பட்ட பகலிலும், நள்ளிரவு நேரத்திலும் தேயிலைத் தோட்டங்கள் வழியாக நடந்து வந்து தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சிறுகுன்றா எஸ்டேட் கீழ் பிரிவு பகுதி குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைக் கூட்டம் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பாதுகாப்பு கம்பிவேலியை உடைத்தன.
பின்னர் அந்த யானைகள் அங்குள்ள சத்துணவு கூடத்தின் கதவை உடைத்து துதிக்கையை உள்ளே விட்டு, அரிசி மூட்டைகளை வெளியே எடுத்து அரிசியை தின்றன. அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தின.
சேதப்படுத்தியது
பின்னர் அந்த யானைகள் அங்குள்ள தொழிலாளர் குடியிருப்புக்குள் நுழைந்து சிலரது வீடுகளின் சுவரை இடித்து சேதப்படுத்தின.
பின்னர் அந்த யானைகள் அங்கிருந்த வனப்பகுதிக்குள் போய் முகாமிட்டு நின்று கொண்டன. இதே போல அப்பர்பாரளை எஸ்டேட் பகுதியில் இரண்டு யானைகள் பட்டபகலில் தேயிலைத் தோட்டத்தை ஒட்டி முகாமிட்டுள்ளன.
இது குறித்து தகவல் அறிந்ததும் வால்பாறை வனச்சரக வனத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story