ஒரு வாரத்தில் குணப்படுத்துவதாக கூறி டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது
டெங்கு காய்ச்சலை ஒரு வாரத்தில் குணப்படுத்துவதாக கூறி சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். டெங்கு நோய் சீசனை பயன்படுத்தி வசூல்வேட்டை நடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.
கோவை,
கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
டெங்கு காய்ச்சலை பயன்படுத்தி போலி டாக்டர்கள் சிகிச்சை அளித்து பணம் சம்பாதித்து வருவதாகவும், இதனால் நோய் முற்றிய நிலையில் பலர் அரசு ஆஸ்பத்திரிக்கு வருவதாகவும் கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் எம்.சந்திரசேகருக்கு தகவல் கிடைத்தது. மேலும் டெங்கு காய்ச்சலை ஒரு வாரத்தில் குணப்படுத்துவதாக கூறி, ராமநாதபுரம் பகுதியில் செல்போன் எண்ணுடன் பிளக்ஸ் போர்டுகளும் வைக்கப்பட்டு இருந்தன.
இதைத்தொடர்ந்து பிளக்ஸ் போர்டில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணின் அடிப்படையில், சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் எம்.சந்திரசேகர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் ராமநாதபுரம் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் உள்ள டி.ஜே. கட்டிடத்தில் ‘சன்லைப் கியூர்‘ என்ற கிளினிக் செயல்பட்டு வந்தது. அங்கு சென்ற மருத்துவ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அப்போது ராபர்ட் சாக்கோ (வயது 58) என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் எம்.பி.பி.எஸ். படிக்கவில்லை என்றும், பி.ஏ.பொருளாதாரம் படித்துவிட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும், போலி டாக்டர் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர் அக்குபஞ்சர் படித்து உள்ளதாக ஒரு சான்றிதழ் வைத்திருந்தார். அதனை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
டெங்கு, பன்றிக்காய்ச்சல், எய்ட்ஸ், நிமோனியா, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்று எழுதப்பட்ட தகவல் பலகை கிளினிக்கில் பொருத்தப்பட்டு இருந்தது. தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், இந்த நோயின் பெயரை பயன்படுத்தி ராபர்ட் சாக்கோ ஒரு வாரத்தில் குணப்படுத்துவதாக கூறி வசூல்வேட்டையில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. கிளினிக்கில் இருந்து சத்து டானிக் மற்றும் வைட்டமின் மருந்துகள் கைப்பற்றப் பட்டன.
இது குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் சந்திரசேகர் கூறும்போது, ‘இதுபோன்ற போலி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிடிபட்ட டாக்டர் எம்.பி.பி.எஸ் படிக்காமல் சிகிச்சை அளித்துள்ளார். அக்குபஞ்சர் படித்து இருப்பதாக கூறும் அவர், டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். அக்குபஞ்சர் சான்றிதழ் சரியானதா? போலியானதா? என்றும் ஆய்வு செய்யப்படும். கிளினிக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள மருந்துகளும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது போன்ற போலி டாக்டர்கள் குறித்து சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்‘ என்று கூறினார்.
பின்னர் போலி டாக்டர் ராபர்ட் சாக்கோவை கோவை ராமநாதபுரம் போலீசில் மருத்துவ அதிகாரிகள் ஒப்படைத்தனர். தொடர்ந்து மருத்துவம் படிக்காமல் தவறான மருந்துகள் வழங்குதல், மோசடி செய்தல் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராபர்ட் சாக்கோவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story