தடுப்பணையில் குளித்த அரசு ஆஸ்பத்திரி ஊழியர் நண்பருடன் தண்ணீரில் மூழ்கி சாவு
காலிங்கராயன் தடுப்பணையில் குளித்த அரசு ஆஸ்பத்திரி ஊழியர் நண்பருடன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
பவானி,
சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜன் (வயது 33). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பிஸ்கட் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
ஈரோடு மாவட்டம் சித்தோடு நால்ரோட்டை சேர்ந்தவர் டான்பிரவீன் (32). இவருக்கு திருமணம் ஆகி கிருத்திகா (27) என்ற மனைவியும், சக்தி (2) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். டான்பிரவீன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கணினி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். புஷ்பராஜனும், டான்பிரவீனும் நண்பர்கள் ஆவர்.
இவர்கள் 2 பேரும் பவானி காலிங்கராயன்பாளையம் அருகே உள்ள காலிங்கராயன் தடுப்பணைக்கு குளிக்க சென்றனர். பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் பவானி ஆற்றில் இருந்து காலிங்கராயன் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. அந்த தடுப்பணையில் இறங்கி 2 பேரும் குளித்தனர். ஆழமான பகுதியில் குளித்ததால் 2 பேரும் நீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டனர்
இந்த நிலையில் வெகு நேரமாகியும் 2 பேரும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அங்கு தேடிச்சென்று பார்த்தனர். அப்போது தடுப்பணையின் கரையோரத்தில் செருப்பு, பேண்ட், கடிகாரம், சட்டை மட்டும் கிடந்தது. அவர்கள் 2 பேரையும் காணவில்லை.
இதுகுறித்து பவானி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தடுப்பணையில் இறங்கி 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டார்கள். இரவு 8 மணி வரை தேடியும் 2 பேரும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று காலை 2-வது நாளாக தேடும் பணி நடந்தது.
இந்த நிலையில் லட்சுமிநகர் காலிங்கராயன் பாலம் அருகே உள்ள வாய்க்காலில் புஷ்பராஜன் பிணமாக கிடந்ததை பார்த்தனர். உடனே அவரது உடலை மீட்டனர். தொடர்ந்து டான்பிரவீனை தேடும் பணியில் ஈடுபட்டார்கள். ஆனால் காலிங்கராயன் தடுப்பணையில் தண்ணீர் அதிகமாக சென்றதால் டான்பிரவீனை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து நீர்வரத்தை குறைக்க பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை நிறுத்துமாறு காலிங்கராயன் பாசன விவசாயிகள் சங்க தலைவர் வேலாயுதம், சமூக ஆர்வலர் சம்பத்குமார் ஆகியோர் கலெக்டர் பிரபாகருக்கு தகவல் கொடுத்தார்கள்.
இதையடுத்து கலெக்டரின் உத்தரவின்பேரில் அணையில் இருந்து மதியம் 3 மணி அளவில் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் டான்பிரவீனை தீயணைப்புவீரர்கள் தேடும் முயற்சியை தொடர்ந்தார்கள்.
சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு காலிங்கராயன் தடுப்பணையில் ஷட்டர் அருகே டான்பிரவீனை பிணமாக மீட்டனர். இதைத் தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த புஷ்பராஜன், டான்பிரவீன் ஆகியோரது உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Related Tags :
Next Story