கோவில்பட்டியில் 2–வது நாளாக மினி பஸ்கள் வேலைநிறுத்தம்
கோவில்பட்டியில் 2–வது நாளாக மினி பஸ்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தின் வடக்கு பகுதியில் மினி பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல நகரசபை நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மினி பஸ் உரிமையாளர்கள் நேற்று முன்தினம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி– கடலையூர் ரோட்டில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பாக அனைத்து மினி பஸ்களையும் சாலையோரம் வரிசையாக நிறுத்தினர்.
நேற்று காலையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா, வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன், தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், நகரசபை ஆணையாளர் அச்சையா ஆகியோர் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தை பார்வையிட்டனர். பின்னர் நகரசபை ஆணையாளர் அச்சையா கூறுகையில், அண்ணா பஸ் நிலையத்தின் வடக்கு பகுதியில்தான் மினி பஸ்களை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.
2–வது நாளாக...
ஆனால் மினி பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், அண்ணா பஸ் நிலையத்தின் வடக்கு பகுதியில் ஒரே நேரத்தில் 5 மினி பஸ்களை மட்டுமே நிறுத்த முடியும். ஆனால் தற்போது அண்ணா பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 10 முதல் 15 மினி பஸ்கள் வந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. புதிய இடத்தில் மினி பஸ்களை நிறுத்தினால் 5 மினி பஸ்களை தவிர மற்ற மினி பஸ்கள், பஸ் நிலையத்துக்கு வெளியே நிற்கும். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். எனவே வழக்கம்போல் மினி பஸ்கள் அண்ணா பஸ் நிலையத்துக்கு சென்று, பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும் வரையிலும், வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்று கூறினர்.
இதனால் நேற்று 2–வது நாளாக மினி பஸ்கள் இயக்கப்படவில்லை.

Related Tags :
Next Story