செங்கல்பட்டு அருகே லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
செங்கல்பட்டு அருகே லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு,
தனியார் பார்சல் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி ஒன்று தினந்தோறும் சென்னையில் இருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு புதுச்சேரிக்கு வந்து செல்வது வழக்கம்.
அதுபோல நேற்றும் சென்னையில் இருந்து பொருட்களை ஏற்றிச்சென்று இறக்கிவிட்டு மாலை சென்னை நோக்கி வந்தது. லாரி செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டி என்ற இடத்தின் அருகே வந்தபோது லாரியில் இருந்து திடீரென சத்தம் வந்தது.
டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு முன்பக்க என்ஜின் பகுதியை திறந்து பார்த்தார்.
தீப்பிடித்தது
அப்போது திடீரென லாரி தீப்பற்றி எரிய தொடங்கியது. இது குறித்து செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ரேடியட்டரில் தண்ணீர் இல்லாமல் சூடானதால் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story