அமைச்சர் ஜெயக்குமார் பற்றி முகநூலில் அவதூறு தகவல் வாலிபர் கைது


அமைச்சர் ஜெயக்குமார் பற்றி முகநூலில் அவதூறு தகவல் வாலிபர் கைது
x

முகநூல் பக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பற்றி அவதூறு தகவல்கள் வெளியிட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் பற்றி முகநூல் பக்கத்தில் அவதூறு தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

முகநூல் பக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பற்றி அவதூறு தகவல்கள் வெளியிட்டதாக சீர்காழியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 33) என்பவர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.

இன்டர் நெட் மையம் நடத்தி வரும் அவரை நேற்று சென்னை அழைத்து வந்தனர். விசாரணைக்குப்பிறகு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். 

Next Story