தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 5 இடங்களில் பஸ்கள் புறப்பாடு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,சிறப்பு பேருந்துகள் கீழ்கண்ட 5 பகுதிகளிலிருந்து இயக்கப்பட உள்ளது.
சென்னை,
சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் சிறப்பு பேருந்துகள் கீழ்கண்ட 5 பகுதிகளிலிருந்து இயக்கப்பட உள்ளது.
* கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:- சென்னையிலிருந்து வேளாங்கன்னி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, திருவனந்தபுரம், பண்ருட்டி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், சேலம், கோவை, எர்ணாகுளம், பெங்களூரு.
* அண்ணாநகர் மேற்கு பணிமனை பேருந்து நிறுத்தத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:- சென்னையிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநிலப் பேருந்துகள் அனைத்தும்.
* பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:- ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர்.
* தாம்பரம் சானிட்டோரியம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:- திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் அதைத் தாண்டி செல்லும் பேருந்துகள்.
* சைதாப்பேட்டை மாநகர பேருந்து பணிமனையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:- கிழக்கு கடற்கரை சாலை வழியாக, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story