மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம்.மில் தீயில் எரிந்த நிலையில் ரூ.500 நோட்டு வந்ததால் பரபரப்பு + "||" + In ATM Burnt Rs.500 note

ஏ.டி.எம்.மில் தீயில் எரிந்த நிலையில் ரூ.500 நோட்டு வந்ததால் பரபரப்பு

ஏ.டி.எம்.மில் தீயில் எரிந்த நிலையில் ரூ.500 நோட்டு வந்ததால் பரபரப்பு
ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியில் ஏ.டி.எம்.மில் தீயில் எரிந்த நிலையில் ரூ.500 நோட்டு வந்ததால் பரபரப்பு.
ஆவடி, 

ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியில் அண்ணாநகர் செல்லும் சாலையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் ஏ.டி.எம். மையம் இயங்கி வருகிறது. அதே பகுதியை சேர்ந்த அருண் என்பவர் நேற்று மாலை அந்த ஏ.டி.எம். மையத்துக்கு சென்று ரூ.1,000 எடுத்தார்.

அதில் ஒரு 500 ரூபாய் நோட்டின் ஒரு பகுதியில் தீயில் எரிந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வங்கி மேலாளரை அணுகி விவரம் கேட்டார். அதற்கு வங்கி மேலாளர், இதற்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி உரிய பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.

ஏ.டி.எம். மையத்தில் பணம் வைக்கும் ஊழியர்கள் தீயில் எரிந்தது, கிழிந்து போன ரூபாய் நோட்டுகளை வைத்து விடுகின்றனர். அந்த பணத்தை எடுக்கும் பொதுமக்கள், அதை மாற்ற முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுபோன்று செயல்படும் வங்கி ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.