சயான் கோலிவாடாவில் அம்மன் கோவில் அகற்றம்
மும்பை சயான்கோலிவாடா சர்தார் நகர் 1-ம் எண் பகுதியில் அம்மன் கோவில் அகற்றம்.
மும்பை,
மும்பை சயான்கோலிவாடா சர்தார் நகர் 1-ம் எண் பகுதியில் ஓம் சிவசக்தி மாரியம்மன் கோவில் இருந்தது. இந்த கோவிலை அந்த பகுதியை சேர்ந்த தமிழர்கள் நிர்வகித்து வந்தனர். ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், குடிநீர் குழாய் செல்லும் பகுதியில் இருந்த அந்த கோவில் கடந்த 6 மாதத்திற்கு முன் இடிக்கப்பட்டது. இந்த நிலையில், அதே இடத்தில் தமிழர்கள் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து கொட்டகை அமைத்து வழிபட்டு வந்தனர். இதுபற்றி மாநகராட்சிக்கு புகார் வந்தது. இதையடுத்து நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியர்கள் வந்து கோவில் கொட்டகையை மீண்டும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.
தமிழ்மக்களின் கோரிக்கையை ஏற்று சாமி சிலையை தூக்கி செல்லவில்லை. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சாமி சிலையை பத்திரமாக எடுத்து சென்றனர்.
Related Tags :
Next Story