கோவிலில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படுமா?


கோவிலில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படுமா?
x
தினத்தந்தி 13 Oct 2017 1:00 PM IST (Updated: 13 Oct 2017 11:19 AM IST)
t-max-icont-min-icon

கண்டராதித்தம் கிராமத்தில் கோவிலில் இயங்கி வரும் குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த் துள்ளனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கண்டராதித்தம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி அருகே குழந்தைகள் ஊட்டச்சத்து அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. இந்த அங்கன்வாடி மையத்தில் சுமார் 15 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த அங்கன்வாடி கட்டிடம் கடந்த 2 வருடங் களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. பின்னர் சில காலம் அரசு உயர் நிலைப்பள்ளியில் இந்த அங்கன் வாடி மையம் செயல்பட்டு வந்தது. பிறகு அங்கு இடம் நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அங்கன்வாடி மாற்றப்பட்டு சுமார் 6 மாதங்களாக இயங்கி வருகிறது.

தற்போது, இங்கு உள்ள குழந்தைகளுக்கு அங்கன் வாடி பணியாளர் இல்லத்தில் இருந்து உணவு பொருட்கள் சமைத்து தரப்பட்டு வருகிறது. மேலும் விழாக்காலங்களில் கோவிலுக்கு பக்தர்கள் சாமி கும்பிட வரும்போது கோவிலில் உள்ள அங்கன் வாடி மைய குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், குழந்தைகள் இயற்கை உபாதைகளை கழிக்க இடமில்லாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் அங்கன் வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கிராம மக்கள் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. எனவே குழந்தைகளின் நலன் கருதி புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட திருமானூர் ஒன்றிய அலுவலக நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கண்டராதித்தம் கிராம பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story