மன்னார்குடியில் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலி


மன்னார்குடியில் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலி
x
தினத்தந்தி 13 Oct 2017 8:00 PM IST (Updated: 13 Oct 2017 12:40 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நடராஜபிள்ளை தெருவை சேர்ந்தவர் ரகுராமன். கொத்தனார். இவருடைய மகள் மதுமதி (வயது 19). தஞ்சையில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் சி.ஏ. ஆடிட்டிங் பயிற்சி பெற்று வந்த மதுமதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதனால் பெற்றோர் அவரை, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து டாக்டர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் மதுமதிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இளம்பெண் மதுமதி நேற்று பரிதாபமாக இறந்தார். டெங்கு பாதிப்பால் மன்னார்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் பலியாகி இருந்தார். இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது மன்னார்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story