குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே ரோடு மாமானந்தல் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு மின்சார வாரியம் சார்பில் மின்மாற்றி அமைக்கப்பட்டு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, தினந்தோறும் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி இப்பகுதியில் இடி-மின்னலுடன் பெய்த மழையின்போது, மின்மாற்றி பழுதானது. இதனால் மின்வினியோகம் தடைபட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பழுதடைந்த மின்மாற்றியை சீரமைத்து, மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு புகார் தெரிவித்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் கிராமமக்கள் குடிநீரின்றி தவித்து வந்தனர். மேலும் மின்தடை காரணமாக கிராம மக்கள் சரிவர தூங்க முடியாமலும், மாணவர்கள் படிக்க முடியாமலும் கடும் அவதிப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று மதியம் அங்குள்ள கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் பழுதடைந்த மின்மாற்றியை சீரமைத்து மின்வினியோகம் செய்து தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று கண்டன கோஷங்களை எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், பழுதடைந்த மின்மாற்றியை சீரமைத்து மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகம் செய்ய உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story