சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வேண்டுராயபுரம் கிராமத்தில் ஐகோர்ட்டு அனுமதியுடன் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வேண்டுராயபுரம் கிராமத்தில் ஐகோர்ட்டு அனுமதியுடன் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி மல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார்(வயது 31) மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த திருப்பதி (22) என்பவர் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்து பாதுகாப்பிற்காக கட்டப்பட்டிருந்த தடுப்பு கயிற்றை அறுத்தாராம். அதை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தடுத்துள்ளார். அப்போது திருப்பதி சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகின்றது. இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் திருப்பதியை கைது செய்தனர்.

Related Tags :
Next Story