மராமத்து பணிக்கு பின்பும் கோல்வார்பட்டி அணையில் இருந்து வீணாகும் தண்ணீர்
சாத்தூர் அருகே உள்ள கோல்வார்பட்டி அணையில் மராமத்து பணிக்கு பின்னரும் தண்ணீர் வீணாக வெளியேறும் நிலை உள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் விவசாயிகள் முற்றிலுமாக மானாவாரி விவசாயத்தையே நம்பி உள்ளனர். விருதுநகர், சாத்தூர் பகுதியில் உள்ள விவசாயிகள் ஆனைக்குட்டம் மற்றும் கோல்வார்பட்டி அணையில் சேமிக்கப்படும் தண்ணீரையும், கிணற்று பாசனத்தையும் நம்பி உள்ளனர். வறட்சி காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த அணைகளில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. கிணறுகளிலும் தண்ணீர் ஊற்று வறண்டு விட்டதால் விவசாயத்தில் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
கோல்வார்பட்டி அணை எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது திறந்து வைக்கப்பட்டது. இந்த அணையில் தண்ணீர் சேமிக்கப்பட்டால் கோல்வார்பட்டி, ஏ.புதுப்பட்டி, வீரார்பட்டி, கோபாலபுரம், நல்லநாயக்கன்பட்டி, நாராயணகுடும்பன்பட்டி, கணபதியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் பாசனவசதி பெரும். ஆனால் இந்த அணையில் தண்ணீர் வரத்து இருந்தாலும் ஷட்டர்கள் பழுது காரணமாக தண்ணீர் வெளியேறி வீணாகும் நிலை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த அணையின் ஷட்டர்களை மராமத்து செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்ததன் பேரில் பொதுப்பணித்துறையினர் மராமத்து பணிகளை மேற்கொண்டதாக கூறப்பட்டது.
ஆனாலும் மராமத்துக்கு பின்னரும் அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேறும் நிலை உள்ளது. ஷட்டர் அருகேயுள்ள மடையிலும் பழுது ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. தற்போது அணையில் 10 அடி தண்ணீர் இருப்பதாக கூறப்பட்டாலும் தண்ணீர் தொடர்ந்து வெளியேறுவதால் அணை வறண்டுவிடும் நிலை உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்தாலும் ஷட்டர் பிரச்சினை காரணமாக இந்த அணையில் நீரை தேக்கி வைக்கமுடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

Related Tags :
Next Story