ராமநாதபுரம், திருவாடானை பகுதிகளில் தடுப்பணைகள் கட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
ராமநாதபுரம், திருவாடானை பகுதிகளில் மழைநீரை சேமிக்கும் வகையில் தடுப்பணைகள் கட்ட மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் ஆய்வு செய்தார்.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டமானது மழை பொழியும் அளவை ஒப்பிடுகையில் மற்ற மாவட்டங்களை விட சற்று பின்தங்கிய வறட்சியான மாவட்டமாக உள்ளது. இதையடுத்து இம்மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை மேம்படுத்தவும், நீர் ஆதாரங்களை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை காலங்களில் கண்மாயின் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் பெருகி முழு கொள்ளளவு எட்டும் சூழ்நிலையில் உபரி நீரானது கடலில் விரயமாக சென்று சேரும் நிலை இருந்து வருகிறது.
மேலும் கடல்நீர் மட்டம் அதிகரிக்கும் சூழ்நிலையில் கடல்நீரானது குடிநீருடன் கலக்கும்போது குடிநீரின் தன்மை மாறுவதற்கு வாய்ப்பாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் பொதுமக்கள் பயன்பெறும் நோக்கில் அந்தந்த கிராமப்புற பகுதிகளில் உள்ள கால்வாய்களில் தடுப்பணைகள் கட்டி நீர் ஆதாரங்களை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் மாவட்ட கலெக்டர் நடராஜன், வேளாண்மை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சார்ந்த அலுவலர்களுடன் ராமநாதபுரம் தாலுகா வெண்ணத்தூர் ஊராட்சி முத்துரெகுநாதபுரம் கிராமம் மற்றும் திருவாடானை தாலுகா நம்புதாளை, சோழியக்குடி ஆகிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று தடுப்பணைகள் கட்ட களஆய்வு மேற்கொண்டார். மேலும் தடுப்பணைகள் கட்டுவது பற்றி அந்தந்த கிராமங்களை சார்ந்த பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
பின்னர் தடுப்பணை கட்டுவதற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்து தமிழ்நாடு அரசிற்கு கருத்துரு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும் அரசின் ஒப்புதல் பெற்றபின் இந்த கிராம பகுதிகளில் ஆக்கப்பூர்வமான முறையில் மழைநீரை பயன்படுத்த ஏதுவாக தடுப்பணைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கிராம பொதுமக்களிடம் கலெக்டர் தெரிவித்தார். இந்த ஆய்வுகளின்போது வேளாண்மை பொறியியல் துறை செயற் பொறியாளர் தாமஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜா, வேளாண்மை அலுவலர் அம்பேத்குமார் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story