வியாபார நோக்கத்துடன் செயல்படும் தனியார் ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கை
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி வியாபார நோக்கத்துடன் செயல்படும் தனியார் ஆஸ்பத்திரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் லதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காரைக்குடி,
காரைக்குடியில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இரவு கலெக்டர் லதா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆஸ்பத்திரி முழுவதும் அவர் சுற்றி பார்த்தார். பின்னர் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்ட வார்டுகளுக்கு சென்று பல பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தார். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து குழந்தைகள் வார்டுக்கு சென்ற கலெக்டர், அங்கு சிகிச்சை பெறும் குழந்தைகளின் பெற்றோரிடம் நலம் விசாரித்தார். நோயாளிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய கொசுவலைகள் குறித்தும் அவர் டாக்டர்களிடம் கேள்வி எழுப்பினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த கலெக்டர் லதா கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க தேவையான அனைத்து உபகரணங்களும், மருந்துகளும் உள்ளன. அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டும் தான் உலக சுகாதார மையத்தின் வழிகாட்டுதலின்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சில தனியார் ஆஸ்பத்திரிகள் வியாபார நோக்கத்தோடும், பொதுமக்களை ஏமாற்றும் விதமாகவும் உரிய உபகரணங்கள் இன்றி சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்து வருகின்றன. இதுகுறித்து புகார்களும் வந்த வண்ணம் உள்ளது. எனவே இதுபோன்ற தனியார் ஆஸ்பத்திரிகள் மீது கடும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும். டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர களப்பணியாற்றி வருகின்றது. மாவட்டத்தில் 926 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக அறியப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 35 பேர், டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது சுகாதார துறை இணை இயக்குனர் விஜயன், துணை இயக்குனர் யசோதாமணி, நகராட்சி ஆணையாளர் சுந்தரம்பாள் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story