சமூக வலைத்தளத்தில் இளம்பெண்ணின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்ட வாலிபர் கைது
கோவையை சேர்ந்த இளம்பெண்ணின் ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபரை கோவை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
கோவை,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா புஞ்சைபுளியம்பட்டி ஜே.ஜே.நகர் அண்ணமார் கோவில் வீதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியம். இவரது மகன் ரங்கநாதன் (வயது 35). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. மேலும் கூலிவேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ரங்கநாதனுக்கு கோவையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிடம் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த பெண்ணிடம் தனது பெயர் சரண் என்றும், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் தெரிவித்து உள்ளார். மேலும் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த இளம்பெண் அவருடன் பழகி வந்து உள்ளார்.
ரங்கநாதனை அளவுக்கு மீறி அந்த இளம்பெண் நம்பி உள்ளார். இந்த நிலையில் ரங்கநாதன் தான் சரவணம்பட்டியில் வசிப்பதாக தெரிவித்து, அந்த பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை பெற்றுள்ளார். இதனிடையே சம்பந்தப்பட்ட இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.இதனை அறிந்து கொண்ட ரங்கநாதன், இளம்பெண்ணின் தந்தையை தொடர்பு கொண்டு உங்களது பெண்ணை எனக்குதான் திருமணம் செய்து தர வேண்டும். இல்லையென்றால் உங்களது பெண்ணின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
மேலும் அந்த பெண்ணின் ஆபாச புகைப்படத்தை வைத்து சமூக வலைத்தளத்தில் போலி முகவரி தொடங்கி பல்வேறு நபர்களுடன், ‘சாட்’ செய்து உள்ளார். இதுதவிர அந்த பெண் வசிக்கும் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு ‘வாட்ஸ் அப்’ மூலம் இளம்பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்பி உள்ளார்.
இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த அந்த இளம்பெண் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் பெருமாள் மேற்பார்வையில் மத்திய குற்ற பிரிவு உதவி கமிஷனர் ஆசைதம்பி தலைமையில் போலீசார் நேற்று ரங்கநாதனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை அனுப்ப பயன்படுத்தப்பட்ட செல்போன், சிம்கார்டுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ரங்கநாதன் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story