நான் பிரதமரை தவறாக பேசவில்லை மந்திரி ரோஷன் பெய்க் சொல்கிறார்


நான் பிரதமரை தவறாக பேசவில்லை மந்திரி ரோஷன் பெய்க் சொல்கிறார்
x
தினத்தந்தி 14 Oct 2017 3:51 AM IST (Updated: 14 Oct 2017 3:50 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியை தவறாக பேசவில்லை என்று மந்திரி ரோஷன் பெய்க் மறுத்துள்ளார்.

பெங்களூரு, 

எனக்கு தமிழ் மொழி அரைக்குறையாக தான் தெரியும். எனது நாட்டின் பிரதமர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர் பா.ஜனதாவின் பிரதமர் அல்ல. அவர் நாட்டின் பிரதமர். எனக்கு தமிழ் தெளிவாக பேச தெரியாது. பண மதிப்பிழப்பு, சரக்கு-சேவை வரி திட்டம் அமலுக்கு வந்த பிறகு வியாபாரிகள், மார்வாடிகள், பிரதமரின் ஆதரவாளர்கள் என்ன பேசிக்கொள்கிறார்களோ அதை நான் கூறினேன்.

நான் பிரதமரை தவறாக பேசவில்லை. தகாத வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. நான் வீட்டு வேலைக்காரர்களுக்கு எதிராக கூட அத்தகைய வார்த்தைகளை பயன்படுத்தியது இல்லை. அரசுக்கு எதிராக பிரச்சினை கிளப்ப பா.ஜனதாவினரிடம் ஒன்றும் இல்லை. அதனால் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பா.ஜனதாவினர் ஏதாவது ஒரு பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள். இப்போது என்னை இலக்கு வைத்துள்ளனர்.

இவ்வாறு ரோஷன் பெய்க் கூறினார். 

Next Story