கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதி 2 வாலிபர்கள் பலி


கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதி 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 14 Oct 2017 4:30 AM IST (Updated: 14 Oct 2017 4:07 AM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் புதுபெருங்களத்தூர் நேதாஜி தெரு, பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் முனியன். இவரது மகன் செல்வகுமார் (வயது 25). இதைப்போல சிங்கபெருமாள்கோவிலை அடுத்த திருக்கச்சூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் மகன் சிவபிரசாத் (22).

இவர்கள் இருவரும் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னிஷியனாக பணிபுரிந்து வந்தனர். நேற்று மாலையில் இருவரும் பெருங்களத்தூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

இவர்கள் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் அருகே செல்லும் போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த வாலிபர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது அதே கண்டெய்னர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Related Tags :
Next Story