கரும்பு நிலுவைத்தொகையை வழங்கக்கோரி எறையூர் சர்க்கரை ஆலை முன் விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம்


கரும்பு நிலுவைத்தொகையை வழங்கக்கோரி எறையூர் சர்க்கரை ஆலை முன் விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2017 4:32 AM IST (Updated: 14 Oct 2017 4:31 AM IST)
t-max-icont-min-icon

கரும்பு நிலுவைத்தொகையை வழங்கக்கோரி எறையூர் சர்க்கரை ஆலை முன் விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் எறையூர் சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை நிர்வாகம் தரவேண்டிய 250 கோடி ரூபாய் நிலுவைதொகையை தரக்கோரி கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் அரை நிர்வாணத்துடன் கண்டன ஆர்ப்பாட்டமும், பிச்சை எடுக்கும் போராட்டமும் நேற்று நடைபெற்றது.

கரும்பு விவசாயிகளின் சங்க பிரதிநிதிகள் பேசும் போது ஆலைக்கு கரும்பு வெட்டிய பாக்கித்தொகையை உடனே வழங்க வேண்டும. வெட்டிய கரும்புக்கு பாக்கித்தொகையை தமிழக அரசு வழங்கவில்லை என்றால் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர்.

கரும்பு விவசாயிகளுக்கு வங்கிகள் பயிர்கடன் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் மாவட்ட செயலாளர் வரதராஜ் உட்பட சங்க பிரதிநிதிகள் ஞானமூர்த்தி, ராஜேந்திரன், வரதராஜன், சீனிவாசன், முருகேசன் உட்பட 100–க்கும் மேற்பட்டவிவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story