குப்பைகளை அகற்றி தூய்மைப்பணி மேற்கொள்ள கோரி பொதுமக்கள் சாலை மறியல்
பெரம்பலூர் அருகே டெங்கு காய்ச்சல் பரவுவதால் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி தூய்மைப்பணி மேற்கொள்ள வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே உள்ள சத்திரமனை கிராமம் அம்பேத்கர் தெரு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்பு பகுதியை ஒட்டியபடி குப்பை கள் மலைபோல் குவிந்து கிடந்தன. மேலும் பன்றிகள், நாய்கள் உள்ளிட்டவை குப்பைகளை கிளறி விடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இருந்தது.
பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவ்வழியாக மூக்கை பிடித்து கொண்டு முகம் சுளித்தபடியே செல்ல வேண்டி இருந்தது. மேலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் குளிப்பது உள்ளிட்டவற்றுக்காக தண் ணீர் தொட்டி கட்டி விடப்பட் டிருந்தது. இந்த தொட்டியை நீண்ட நாட்களாக சுத்தம் செய் யாததன் காரணமாக பச்சை பசேல் என பாசி படர்ந்து தண்ணீர் கலங்கலாக இருந்தது. இதனால் அந்த தண்ணீரில் கொசுக்கள் அதிக மாக உற்பத்தியாவதால் மக் கள் இரவில் தூங்க முடியாமல் தவிப்புக்குள்ளாயினர்.
மேலும் அங்குள்ள குடிநீர் கிணற்றை சுற்றிலும் செடிகள் முளைத்திருப்பதால் கிணற்றில் தண்ணீர் இரைக்க பொது மக்கள் சிரமப்பட்டனர். கிணறு தூர்வாரப் படாததால் தண்ணீரில் குப்பைகள் உள் ளிட்டவை மிதந்தபடி இருக் கின்றன.
மலையடிவாரத்தில் இருந்து வழிந்தோடும் மழைநீரை விவசாய தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் வரத்து வாய்க்கால் சத்திரமனை கிராமத்தில் செல்கிறது. ஆனால் நீண்ட நாட்களாக வரத்து வாய்க்கால் பராமரிப்பு செய்யப் படாததால் புதர்மண்டி கிடக்கிறது. மேலும் போதிய வடிகால் வசதி இல்லாததால் சாக்கடை கழிவுநீர் ஆங் காங்கே தேங்கி, டெங்கு கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. சுற்றுப்புற சூழலை தூய்மைப்படுத்தும் விதமாக சத்திரமனை பகுதி யில் குப்பைகளை அகற்றுவது, வடிகால் வசதி ஏற்படுத்தி தருவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அதி காரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் சுகாதார சீர்கேட்டின் காரணமாக சத்திரமனை கிராமத்தில் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது. டெங்குவை தடுப்பதற்கான களப்பணியை அதிகாரிகள் மேற்கொள் ளாததால் தங்கள் பகுதி யிலுள்ள கல்லூரி மாணவர் சதீஷ் (வயது 19), கனகா (29), அருண்குமார் (4), இனியா (12) உள்ளிட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தாக பொது மக்கள் குற்றம் சாட்டினர். ஆத்திரமடைந்த மக்கள் தங்கள் பகுதியில் தூய்மை பணியை மேற் கொண்டு பிளச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும், கொசு மருந்து அடிக்க வேண்டும், வரத்து வாய்க்காலை தூர்வார வேண்டும், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும், மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செட்டிக் குளம்-செஞ்சேரி சாலையில் சத்திரமனை பகுதியில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சுகாதாரத்துறை அதிகாரி களை கண்டித்து கோஷம் எழுப்பினர். மக்களின் போராட்டத்தால் அந்த சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி உள்பட போலீ சார் மற்றும் பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் உள்பட அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத் தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி தூய் மைப்பணியை மேற்கொள்வ தாக உறுதியளித்தனர்.
இதைத் தொடர்ந்து அதி காரிகள் உத்தரவின் பேரில் பொக்லைன் எந்திரம், டிராக்டர் வரவழைக்கப்பட்டு குப்பைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணி நடந் தது. அதன் பின்னர் பொது மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென் றனர். இந்த சம்பவத்தால் அப் பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

Related Tags :
Next Story