பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்ற கோரி பஸ்சை சிறைபிடித்து பெற்றோர் போராட்டம்
புத்தாநத்தம் அருகே பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி மாணவ, மாணவிகளின் பெற்றோர் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள அம்மாசத்திரத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தான் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் முன் பகுதி பள்ளமாக இருப்பதால் மழை நீர் தேங்கி விடுகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால் இனி தொடர்ந்து மழைநீர் தேங்கிட வாய்ப்புள்ள நிலையில் மழைநீர் தேங்காத வகையில் மண் கொட்டி சரிசெய்திட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நேற்று மதியம் பள்ளியின் எதிரே உள்ள சாலையில் துவரங்குறிச்சியில் இருந்து மாங்கனாபட்டி நோக்கிச் சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த புத்தாநத்தம் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு பழனி மற்றும் அம்மா சத்திரம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் மீனா சக்திவேல், ஊராட்சி செயலாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத்தொடர்ந்து அனைவரும் சிறைபிடித்திருந்த அரசு பஸ்சை விடுவித்து கலைந்து சென்றனர்.
பள்ளி முன்பு தேங்கிய நீரில் கொசுக்கள் உருவாகி மாணவ, மாணவிகள் காய்ச்சலால் பாதிக்கப்படும் நிலை உருவாகாமல் தடுக்கவே இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story