திண்டிவனம் அருகே விபத்து டிராக்டர் மீது லாரி மோதல்; ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் பலி
திண்டிவனம் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பாஞ்சாலம் கிராமத்தில் இருந்து உயர் மின் கோபுரம் அமைக்க பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை டிராக்டர் ஒன்று காஞ்சீபுரம் மாவட்டம் வெளிபாக்கம் கிராமத்திற்கு புறப்பட்டு சென்றது. அந்த டிராக்டரை காஞ்சிபுரம் இரும்பேடு கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (வயது30) என்பவர் ஓட்டினார். டிராக்டரில் தொழிலாளிகளான இரும்பேடு கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் (23), ஆறுமுகம்(40), திருநெல்வேலி கீழ்பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவரும், உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி ஒப்பந்ததாரருமான உருதுபாண்டி(40) ஆகியோர் சென்றனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோனேரிக்குப்பம் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த லாரி ஒன்று ஒன்று டிராக்டர் மீது மோதியது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் ரமேஷ், ஒப்பந்ததாரர் உருதுபாண்டி, தொழிலாளி புருஷோத்தமன் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஆறுமுகம் பலத்த காயம் அடைந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து விபத்தில் பலியான ரமேஷ் உள்பட 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story