விவசாயி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கீழச்சிவல்பட்டி அருகே விராமதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 49). விவசாயி.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கீழச்சிவல்பட்டி அருகே விராமதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 49). விவசாயி. இவர் வீட்டின் வெளிகேட்டை பூட்டி விட்டு தனது மனைவி சரஸ்வதியுடன் வயலுக்கு சென்று விட்டார். பின்னர் மாலை 3 மணிக்கு வீட்டிற்கு வந்த அவர்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 60 பவுன் நகை திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து உடனடியாக கீழச்சிவல்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து வீட்டில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் லைக்கா வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்பநாய் வீட்டிற்குள்ளும், வீட்டை சுற்றிலும் மோப்பம் பிடித்து அப்பகுதியை சுற்றி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயி வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story