சிவகங்கை மாவட்டத்தில் 978 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி
சிவகங்கை மாவட்டத்தில் 978 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது என சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா தெரிவித்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் லதா நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். நேற்று அவர் சிவகங்கை நகராட்சி பகுதியில் உள்ள சாஸ்திரி தெரு, ராஜாஜி தெரு, தாகூர் தெரு, மதுரை மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் நல்ல தண்ணீரை மூடி வைத்தும், காய்ச்சி வடிகட்டியும் பயன்படுத்த வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் தற்போது பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று வரை மாவட்டத்தில் 978 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதில் தற்போது வரை 27 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மழை காலங்களில் வரும் வைரஸ் காய்ச்சலால் சுமார் 8 ஆயிரத்து 200 பேர் வரை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து உரிய முறையில் செயல்படுத்த துணை ஆட்சியர் நிலையில் உள்ள 21 பேர் மண்டல அலுவலர்களாக நியமிக்கபட்டுள்ளனர்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து குளோரினேசன் செய்யவும், கொசு ஒழிப்பு மருந்துகளை தெளிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கபட்டு வருபவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சித்த மருத்துவத்துறை மூலம் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது எடுக்கப்பட்டு வரும் தீவிர நடவடிக்கைகளால் காய்ச்சல் கட்டுப்படுத்தபட்டு வருகிறது. காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறையினர் இணைந்து செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் நானும் தினசரி ஒரு பகுதியில் ஆய்வு நடத்தி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story