மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: இளம்பெண் பலி; பெயிண்டர் படுகாயம்
திருப்பூரில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் பலியானார். பெயிண்டர் படுகாயம் அடைந்தார். போலீஸ் நிலையம் அருகே நடந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர்,
திருப்பூர் சாமுண்டிபுரம் அம்சவிநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வக்குமார்(வயது 40). பெயிண்டர். அம்மாபாளையத்தை சேர்ந்த தங்கத்துரையின் மனைவி செல்வி(45). இவருடைய மகள் நந்தினி(18). செல்வியும், நந்தினியும் செல்வக்குமாருடன் சேர்ந்து பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தனர்.
நேற்றுகாலை பலவஞ்சிப்பாளையத்துக்கு பெயிண்டிங் வேலைக்காக செல்வியும், நந்தினியும் வீட்டில் இருந்து புறப்பட்டு வந்துள்ளனர். செல்வி ஒரு மோட்டார் சைக்கிளில் ஏறி வேலைக்கு சென்றுள்ளார். அதற்கு பின்னால் செல்வக்குமார் மோட்டார்சைக்கிளில் நந்தினியை ஏற்றிக்கொண்டு தாராபுரம் ரோடு நோக்கி சென்றார். குமரன் ரோடு திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே சென்றபோது அந்த வழியாக பின்னால் ஒரு டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது.
எதிர்பாராதவிதமாக செல்வக்குமாரின் மோட்டார்சைக்கிளில் அந்த டிப்பர் லாரி மோதியது. இதில் செல்வக்குமாரும், நந்தினியும் கீழே விழுந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி நந்தினி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். செல்வக்குமாருக்கு கை, மற்றும் இடுப்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்து வந்து நந்தினியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நந்தினியின் உடலை பார்த்து தாயார் செல்வி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கண்டியன்கோவில் முதியாநரச்சலை சேர்ந்த பொன்னுச்சாமியை(55) கைது செய்தனர்.
திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே நடந்த விபத்தில் இளம்பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story