டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு மாணவர்கள் உள்பட 10 பேர் பலி
டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு மாணவர்கள் உள்பட 10 பேர் பலியானார்கள்.
சேலம்,
சேலம் மெய்யனூர் ஆலமரத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் நந்தகோகுல் (வயது 9). தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நந்தகோகுலை அவரது பெற்றோர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி நந்தகோகுல் பரிதாபமாக இறந்தான்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நல்லியாம்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவர் கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இயக்குனராக உள்ளார். இவரது மகன் ஹரினீஷ் (16). இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, பரமத்திவேலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரினீஷ் பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னபருவாச்சியை சேர்ந்தவர் இளையராஜா. அவருடைய மனைவி ராஜேஸ்வரி (23). இந்த நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தேத்தாம்பட்டியை சேர்ந்தவர், சரவணன். இவருடைய மனைவி சாவித்திரி (27). நிறைமாத கர்ப்பிணியான இவர் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரை மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு வயிற்றிலேயே சாவித்திரியின் குழந்தை இறந்துவிட்டது. இதனால் சாவித்திரியின் நிலை மேலும் மோசமடைந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சாவித்திரி நேற்று பரிதாபமாக இறந்தார்.
உசிலம்பட்டி அருகே உள்ளது சொக்கத்தேவன்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்த கணேசன் மகள் மகாதேவி (15). இவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மகாதேவி பரிதாபமாக இறந்தார்.
வாடிப்பட்டியை அடுத்த போடிநாயக்கன்பட்டி திடீர் நகரை சேர்ந்த சுப்பிரமணி மகள் காயத்ரி(19). இவர் நிலக்கோட்டையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க் கப் பட்டார். நேற்று முன்தினம் இரவு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே காயத்ரி இறந்தார்.
உசிலம்பட்டி அருகே உள்ள துரைச்சாமிபுரம் புதூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் கபிலன்(9). இவர் இதே ஊரில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூர் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் பூவழகன் மகன் முத்தழகன் (28). என்ஜினீயர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த முத்தழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள செம்பியன்கிளரி கிராமத்தை சேர்ந்தவர் ராமையன். விவசாய தொழிலாளி. இவருடைய மகன் சிவக்குமார் (30). மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு சிவக்குமார் பலியானார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா இளையாங்கன்னி கிராமம் குழந்தையேசு நகரை சேர்ந்தவர் குழந்தையேசு என்கிற அருண் ( 39). சித்த மருத்துவர். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையேசுவை திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Related Tags :
Next Story