சாலையில் முந்திச் செல்வதில் மோதல்: அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது


சாலையில் முந்திச் செல்வதில் மோதல்: அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2017 3:30 AM IST (Updated: 15 Oct 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் சாலையில் முந்திச் செல்வதில் மோதல். அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது.

சென்னை, 

சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மாநகர பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அத்திமாஞ்சேரியை சேர்ந்த மணிகண்டன் (வயது 34) ஓட்டிச் சென்றார்.

அப்போது, பஸ்சுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பஸ்சை முந்திச்செல்ல முயன்றார். அதனால், டிரைவர் மணிகண்டனுக்கும், அந்த வாலிபருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. முதலில் வாய்த் தகராறில் தொடங்கிய மோதல் இறுதியில் கைகலப்பாக முடிந்தது. டிரைவர் மணிகண்டனை அந்த வாலிபர் தாக்கினார். இதனால், காயம் அடைந்த பஸ் டிரைவர் இதுகுறித்து வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், டிரைவர் மணிகண்டனை தாக்கிய வாலிபரை கைது செய்தனர். அவரது பெயர் விவேக்குமார் (22). சென்னை பட்டாளம் நைனியப்ப தெருவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. 

Next Story