வேன் கவிழ்ந்து வியாபாரி சாவு; 20 ஆடுகள் பலி 4 பேர் படுகாயம்
திம்பம் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து வியாபாரி சாவு; 20 ஆடுகள் பலி 4 பேர் படுகாயம்
தாளவாடி,
கோவை மாவட்டம் இடிகரையை சேர்ந்த ஆட்டு வியாபாரிகள் வேல்முருகன் (வயது 45), செந்தில், சண்முகம், மோகன்குமார். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த், ரமேஷ், பரமேஸ்வரன் ஆகியோருக்கு ஆடுகள் வாங்க ஒரு வேனில் கர்நாடக மாநிலம் சிமுஹோ சென்றார்கள். வேனை கோவை சரவணம்பட்டியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஓட்டினார்.
சிமுஹோவில் 140 ஆடுகள் வாங்கி வேனில் ஏற்றிக்கொண்டு நேற்று கோவைக்கு வந்துகொண்டு இருந்தார்கள். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் வேன் வந்துகொண்டு இருந்தது. 19-வது கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியபோது திடீரென நிலைதடுமாறி ரோட்டோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.
வேன் கவிழ்ந்ததில் இடிபாடுகளில் சிக்கி ஆட்டு வியாபாரி வேல்முருகன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 20 ஆடுகளும் பலியாகின. டிரைவர் மகேந்திரன், செந்தில், சண்முகம், மோகன்குமார் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தார்கள். ஆனந்த், ரமேஷ், பரமேஸ்வரன் லேசான காயம் அடைந்தார்கள். உடனே அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் 7 பேரையும் மீட்டார்கள். பின்னர் 108 ஆம்புலன்சை வரவழைத்து படுகாயம் அடைந்த 4 பேரையும் சிகிச்சைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுபற்றி அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story