பண்ருட்டி கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு தடுப்பணை உடைந்தது
பண்ருட்டி கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தடுப்பணை உடைந்து சேதமானது.
பண்ருட்டி,
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை நிரம்பியதை தொடர்ந்து அங்கிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் விழுப்புரம் மாவட்ட எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு வழியாக நேற்று முன்தினம் கடலூர் மாவட்டம் பைத்தாம்பாடி, காவனூர் வழியாக அக்கடவல்லி தென்பெண்ணையாற்றை வந்தடைந்தது.
பின்னர், அந்த தண்ணீர் பண்ருட்டி கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றை வந்தடைந்தது. இதனால் வறண்டு கிடந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது.
கண்டரக்கோட்டை பழைய மேம்பாலம் அருகே ஆற்றின் குறுக்கே மண்ணாலான தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் இந்த தடுப்பணையின் ஒரு பகுதி உடைந்து சேதமானது. இதனால், அந்த தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் அப்பகுதி மக்கள் குளித்து மகிழ்வதை காணமுடிகிறது. மேலும், ஆற்றில் தண்ணீர் செல்வதால் ஓரளவு நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story