‘திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக இருப்பதில் மகிழ்ச்சி’ நடிகை வித்யாபாலன் சொல்கிறார்
தணிக்கை குழு உறுப்பினராக இருப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி என்று நடிகை வித்யாபாலன் சொல்கிறார்.
மும்பை,
மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக நடிகை வித்யாபாலன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதுபற்றி அவர் மும்பையில் நிருபர்களிடம் பேசும்போது, “தணிக்கை குழு உறுப்பினராக இருப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி. தணிக்கை குழு உறுப்பினரின் பணி பற்றி பெரும்பாலானோருக்கு தெரியாது. நாங்கள் அனைத்து படங்களையும் பார்ப்பது இல்லை. பிரச்சினை என்று வரும்போது தான் அந்த படத்தை பார்ப்போம். ஆகையால், நான் சொற்ப எண்ணிக்கையிலான படங்களையே பார்த்திருக்கிறேன்” என்றார். பேட்டியின் போது நடிகை கவுதமி, நடிகர் விவேக் அக்னிகோத்ரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story