ஜில்... ஜில்.... ஜிமிக்கி கம்மல்
ஜிமிக்கி அணிந்து, தோழிகளோடு சேர்ந்து ‘ஜிமிக்கி கம்மல்..’ பாட்டுக்கு சூப்பராக ஒரு நடனம் ஆடி அதை வீடியோ எடுத்து ‘பேஸ்புக்கில்’பில் பதிவு செய்து, குறைந்தது 500 ‘லைக்’காவது வாங்காவிட்டால் அவளை டீன்ஏஜ் பெண்ணாக இப்போது தோழிகள்கூட அங்கீ கரிப்பதில்லை.
ஜிமிக்கி அணிந்து, தோழிகளோடு சேர்ந்து ‘ஜிமிக்கி கம்மல்..’ பாட்டுக்கு சூப்பராக ஒரு நடனம் ஆடி அதை வீடியோ எடுத்து ‘பேஸ்புக்கில்’பில் பதிவு செய்து, குறைந்தது 500 ‘லைக்’காவது வாங்காவிட்டால் அவளை டீன்ஏஜ் பெண்ணாக இப்போது தோழிகள்கூட அங்கீகரிப்பதில்லை. ஏன்என்றால் கேரளாவில் ஆரம்பித்த ஜிமிக்கி கம்மல் அலை, தமிழ்நாட்டிலும் பலரையும் தாளம்போடவைத்துவிட்டு, கடல் கடந்து ரஷியா, ஜெர்மனி சென்று, பாடலின் அர்த்தம் தெரியாத பெண்களை எல்லாம்கூட ஆடவைத்துக்கொண்டிருக்கிறது.
இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், ‘வெளிப்பாடுன்ற புஸ்தகம்’ என்ற சினிமாவிற்காக அப்பானி ரவியும், அவரது குழுவினரும் ஆடிய வீடியோவை பார்த்தவர்களைவிட, அந்த பாடலுக்கு சும்மா ஆடிய அழகுப் பெண் ஷெரில் ஜி.கடவனின் நடனத்தை பார்த்தவர்கள் பலமடங்கு அதிகம். அவர் கொச்சி ‘இந்தியன் ஸ்கூல் ஆப் காமர்ஸ்’ ஆசிரியை.
ஜிமிக்கி கம்மல் பாட்டின் வெற்றிக்கு யார் காரணம் என்று, அந்த சினிமாவின் இயக்குனர் லால் ஜோசிடம் கேட்டால், “இசை அமைப்பாளர் ஷானி, பாடலாசிரியர் அனில் பனச்சூரான் ஆகியோர்தான் வெற்றிக்கு காரணம். திரைக்கதை எழுத்தாளர் பென்னி, படத்தில் கல்லூரி மாணவர்களுக் கான குத்துப்பாட்டு ஒன்று தேவை என்று சொன்னார். சொன்னதோடு இல்லாமல் அவரது மகள் பாடுகிற பாடலின் இருவரிகளையும் எனக்கு சொன்னார். அந்தப் பாட்டுதான் இந்த ஜிமிக்கி கம்மலின் மூலப் பாட்டு..” என்கிறார்.
பென்னியின் இளைய மகள் சுசன்னாவிடம் கேட்டால், “என் பள்ளித் தோழிகள் முன்பே இந்த பாடலைப் பாடுவார்கள். எழுதியது யார் என்று தெரியாது. ஜாலியான பாடல் என்பதால் நானும் வீட்டிற்குள் சந்தோஷமான மூடில் இருக்கும்போது அந்த வரிகளை பாடுவேன். நான் வீட்டிற்குள் பாடியதை அப்பா கவனித்திருக்கிறார் என்பது சினிமாவில் பாட்டு வந்த பின்புதான் எனக்கு தெரிந்தது” என்று சிரிக்கிறாள்.
சுசன்னா வீட்டில் பாடிய 8 வரி மூலப் பாடல் இதுதான்:
நின்றம்மேயோட ஜிமிக்கி கம்மல்
நின்றச்சன் கட்டோண்டு போயி
நின்றச்சன்ற கள்ளு குப்பி
நின்றம்ம குடிச்சி தீர்த்தே
நின்றச்சன் கிணற்றில் சாடி
நின்றம்ம கூடே சாடி
நின்றம்ம நீந்தி ஏறி
நின்றச்சன் முங்கி செத்தே..
இந்த பாடலில் அனில் கூடுதலாக சில வரிகளை சேர்த்து ஜிமிக்கி பாடலை பாலீஷ் செய்திருக்கிறார்.
‘இந்த பாடலுக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்குமென்று எதிர்பார்த்தீர்களா?’ என்று அனிலிடம் கேட்டால், “நான் நூறு பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறேன். ஆனால் தாளம் போடக்கூடிய குத்துப்பாட்டு ஒன்றும் அமையவில்லை. அந்த குறையை இது போக்கிவிட்டது. பாட்டில் ‘நின்றம்மே’ (உன் அம்மா) என்று வருவதை, பிரச்சினை ஏற்படாதிருக்க ‘என்றம்மே’ (என் அம்மா) என்று மாற்றினேன். முதலில் கள்ளு குப்பி என்றிருந்தது. அதை பிராண்டி குப்பியாக்கிவிட்டேன். இவ்வளவு பெரிய வெற்றி எனக்கு ஆச்சரியத்தை தந்திருக்கிறது” என்றார். பாடலைப்பாடிய ஷான் ரஹ்மானும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்.
ஜிமிக்கி நடனத்தினால் புகழ்பெற்ற ஷெரில் உற்சாகமாக உலாவந்து கொண்டிருக்கிறார்.
“நான் பள்ளியில் படித்தபோது நடன நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்கிறேன். நான் இங்கு பொருளாதார கணக்குத்துறையில் ஆசிரியையாக பணிக்கு சேர்ந்து மூன்று மாதங்களே ஆகியிருக்கின்றன. ஓணத்தை வித்தியாசமாக கொண்டாட நினைத்தபோது இந்த ஜிமிக்கி பாடலுக்கு நடனமாட திட்டமிட்டோம். ஆசிரியைகளும், மாணவிகளும் சேர்ந்து ஆடிய நடனம் அது. இரண்டு முறை அதற்காக ஒத்திகை பார்த்தோம். நடனத்தில் ஓரளவு அனுபவம் இருந்ததால் நானும், அன்னா ஜார்ஜூம் முன்னணி வரிசையில் நின்றிருந்தோம். ஆனால் இந்த அளவுக்கு நடனம் புகழ்பெறும் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை. எனது அப்பா ஜார்ஜ், அம்மா டெஸ்சி, அண்ணன் ஜெரில் ஆகியோரும் என் நடனத்தை பார்த்து ரசிகர்களாகிவிட்டார் கள்..” என்று ஷெரில் சிரித்துக்கொண்டே சொல்கிறார். இவருக்கு உலகம் முழுக்க இருந்து பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கிறது.
பாட்டாலும், நடனத்தாலும் எல்லோரையும் கவர்ந்துகொண்டிருப்பது, ஜிமிக்கி என்ற ‘கதாநாயகி’தான். ஆபரணமான ஜிமிக்கியின் பூர்வீகத்தை தேடத் தொடங்கினால், இதற்கென்று நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. அது ஒரு நூற்றாண்டையும் கடந்துபோகிறது. காது ஆபரணத்தில் மூத்தது தோடு என்று அறியப்படுகிறது. பின்பு தோடுடன் கிண்ணத்தை கவிழ்த்தியது போன்ற ஜிமிக்கி இணைக்கப்பட்டிருக்கிறது. ஜிமிக்கியை தென்னிந்தியாவின் பூர்வீக ஆபரணமாக சரித்திரம் குறிப்பிடுகிறது. அது எந்த மாநிலத்தில் இருந்து வந்திருந்தாலும் இப்போது அது இந்தியாவில் எல்லா பெண்களின் ஆபரண பெட்டிகளிலும் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. அதற்கான காரணத்தை சென்னையை சேர்ந்த நாட்டியக் கலைஞர் பார்வதி பாலசுப்பிரமணியன் விளக்குகிறார்.
“வட்டம், சதுரம், முட்டை வடிவம் போன்று பெண்களின் முகம் எந்த வடிவத்தில் இருந்தாலும், அத்தனைக்கும் ஜிமிக்கி பொருந்தும். கூடுதல் அழகும் தரும். சில பெண்களின் முகத்தில் கண் அமைப்பிலோ, மூக்கின் தோற்றத்திலோ, உதடுகளின் வடிவத்திலோ லேசான அழகுக் குறைபாடு இருக்கலாம். அந்த குறைபாட்டை ஜிமிக்கி மூலம் சரிசெய்துவிடலாம். எப்படி என்றால், ஜிமிக்கிகள் அவர் களது காதுகளில் அசைந்தாடும்போது எல்லோரது பார்வையும் அந்த ஜிமிக்கிகளை நோக்கித்தான் செல்லும். அப்போது முகத்தில் இருக்கும் குறை, பார்க்கிறவரின் கவனத்தில் பதியாது. இப்படி அழகை சீரமைத்து, கூட்டிக்காட்டுவதால் ஜிமிக்கி அணியும் பெண்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பெண்கள் உச்சி முதல் பாதம் வரை அணியும் எந்த ஆபரணமும் ஆடாது. ஜிமிக்கி மட்டுமே நளினமாக அசைந்தாடும்.
கம்மல்களின் ராணியாக ஜிமிக்கி புகழப்படுவதால், பல்வேறு மாநிலங்கள் தங்களுக்கென்று தனித்தனி ஸ்டைலில் ஜிமிக்கிகளை வடிவமைத்துக்கொண்டன. நீளமான தொங்கட்டானைக் கொண்டவை, காஷ்மீர் ஜிமிக்கிகள். ஆக்சிடைஸ்டு சில்வரில் உருவாக்கி, ஆன்டிக் தோற்றம் தருபவை குஜராத்தி ஜிமிக்கிகள். பச்சை, சிவப்பு நிற கற்கள் பதித்து கலர்புல்லாக காட்சி தருபவை ஜெய்ப்பூர் மினாகாரி ஜிமிக்கிகள். முத்துக்கள் கோர்த்து உருவாக்கப்படுபவை ஐதராபாத் ஜிமிக்கிகள். தென்னிந்தியாவில் நெல் ஜிமிக்கி, செட்டிநாடு ஜிமிக்கி, அன்கட் டயமன்ட் ஜிமிக்கி, கிளிக்கூண்டு ஜிமிக்கி, மயில் ஜிமிக்கி போன்றவை பிரபலம். வைர ஜிமிக்கி இப்போது பிரபலமாகிக்கொண்டிருக்கிறது. ஜிமிக்கிகள் பொதுவாக எடை குறைந்தவை என்றாலும், ஏழு பவுன் வரையுள்ள ஜிமிக்கிகளை கடைகளில் வாங்க முடியும்.
என்னிடம் 20 செட் ஜிமிக்கிகள் உள்ளன. அதில் நான் பாதுகாக்கும் பழைய குடை ஜிமிக்கிக்கு 50 வயதாகிவிட்டது. உள்ளே கிளி இருப்பது போன்ற கிளிக் கூண்டு ஜிமிக்கியும் என்னிடம் உள்ளது. மாட்டி, தோடு, ஜிமிக்கி மூன்றும் இணைந்தது ஒரு செட். முந்தைய காலத்தில் சைடு மாட்டி இருந்தது. காது, கூந்தல் இணைப்பாக அது இருந்தது. இப்போது ஜிமிக்கியோடு சேர்ந்த மாட்டல் காதுக்கு மேல் பகுதியோடு செயின் போன்று இணைக்கப்படுவதால் கூடுதல் அழகு தருவதோடு, காது கீழே இழுக்காத அளவுக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறது. பெண்களின் திருமண ஆபரணங்களில் ஜிமிக்கி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. நிச்சயதார்த்தத்தின்போது தனித் தங்கத்திலான ஜிமிக்கிகளை அணிவோம். முகூர்த்தத்தின்போது சிவப்பு, பச்சை கற்கள் கலந்த கேம்ப் ஜிமிக்கியை அணிந்துகொள்வோம். வரவேற்பு நிகழ்ச்சிக்கு வெள்ளைக்கல் ஜிமிக்கியை தேர்ந்தெடுப்போம். 6 மாத பருவம் முதல் 60 வயது வரை ஜிமிக்கி பெண்களிடம் இருந்து பிரிக்க முடியாதது. அது எங்கள் வாழ்வோடு கலந்தது..” என்று ஜிமிக்கி புராணத்தை சொல்லும் இவர், மாணவிகளோடு சேர்ந்து ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு நடனமும் ஆடி அமர்க்களப்படுத்துகிறார்.
குடும்பத் தலைவியான சாந்தி, “எங்களிடம் எத்தனையோ ஆபரணங்கள் இருக்கின்றன. அவைகளை அணியும்போது கண்ணாடி முன்பு போய் நின்று அழகு பார்க்கத்தான் தோன்றும். ஆனால் ஜிமிக்கியை அணிந்தால் மட்டும்தான் ஒரு ஆட்டம் போடலாமே என்ற ஆசை வருகிறது. ஏன்என்றால் நாம் ஆடும்போது அதுவும் நம்மோடு சேர்ந்து ஆடும்.
பெண்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஜிமிக்கிகளும் சில உண்டு. வயதுக்கு வரும்போது தாய் மாமன் அணிவிக்கும் ஜிமிக்கி, திருமணத்தின்போது அம்மா அணிவிக்கும் ஜிமிக்கி போன்றவைகளை காலம் முழுக்க பாதுகாத்து வைத்திருப்போம். பெண்களுக்கு அதிக அழகு தரும் ஆபரணம் ஜிமிக்கிதான். அழகான ஜிமிக்கி அணிந்து, ஒற்றை பின்னல் போட்டு, தலைநிறைய பூச்சூடி, முகம் நிறைந்த புன்னகையோடு ஒரு பெண் நின்றால் எல்லோருக்கும் அவள் பேரழகாகத்தான் தெரிவாள்” என்கிறார், அவர்.
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவி சுபாஷினியும், மீனாட்சி என்ஜினீயரிங் கல்லூரி மாணவி நிகிதாவும் சேர்ந்து ஆடிய ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு நிறைய ‘லைக்’ விழுந்துவிட அந்த மகிழ்ச்சியில் இருவரும் உற்சாகமாக தீபாவளி ஷாப்பிங் கிளம்பிவிட்டார்கள். சென்னையில் புதிதாக அறிமுகமாகி யிருக்கும் ஜிமிக்கிகளை தேடிப்பிடித்து வாங்குகிறார்கள்.
“வழக்கமாக தீபாவளி ஷாப்பிங் என்றால் உடைகள் வாங்கிவிட்டு அதற்கு மேட்ச்சாக ஆபரணங்கள் தேர்ந்தெடுப்போம். இந்த முறை, முதலில் தேடிப் பிடித்து வித்தியாசமான ஜிமிக்கிகள் வாங்கிவிட்டு, அதற்கு ஏற்றபடி ஆடைகள் வாங்கப்போகிறோம். ஏன்என்றால் இப்போது பலரும் உடுத்தியிருக்கும் ஆடை டிசைனை பார்ப்பதில்லை. அணிந்திருக் கும் ஜிமிக்கி வித்தியாசமாக இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார்கள். நாங்கள் சில்க் நூலில் தயாரித்து கற்கள் பதித்த புது மாடல் ஜிமிக்கிகளை பல வண்ணங்களில் வாங்கியிருக் கிறோம். அதன் விலை 60 ரூபாய்தான். ஜிமிக்கி பாடல் புகழ் பெற்றதை தொடர்ந்து, இந்த ஆண்டு நவராத்திரி பூஜையிலும் ஜிமிக்கி இடம்பிடித்துவிட்டது. நவராத்திரி காலத்தில் வழக்கமாக தினசரி பூஜை முடிந்ததும் பாக்ஸ், தட்டு, ஜாக்கெட் பிட் போன்றவைகளை கொடுப்பார்கள். இந்த ஆண்டு நாங்கள் கலந்துகொண்ட பூஜைகளில் எங்களுக்கு அழகான ஜிமிக்கிகளை கொடுத்தார்கள். இப்போது எங்களைப் போன்ற டீன்ஏஜ் பெண்களுக்கு பெரும்பாலும் ஜிமிக்கிகள்தான் பரிசாக கிடைக்கின்றன. எங்கள் இருவரிடமும் 50-க்கு மேற்பட்ட செட் ஜிமிக்கிகள் இருக்கின்றன. ஆனாலும் ஆசை குறையவில்லை. நெட்டில் புதிய டிசைன் ஏதாவது அறிமுகமாகியிருக் கிறதா என்று தேடிக்கொண்டிருக்கிறோம்..” என்கிறார்கள், இந்த ‘இளம் ஜிமிக்கிகள்’.
ஜிமிக்கி கம்மல் பாட்டால் ஜிமிக்கி வியாபாரம் களைகட்டியிருக்கிறது!

Related Tags :
Next Story