கமிஷனர் அலுவலகத்தில் புதுமுக நடிகர் புகார் ரவுடிகளிடமிருந்து வீட்டை மீட்டு தர கோரிக்கை


கமிஷனர் அலுவலகத்தில் புதுமுக நடிகர் புகார் ரவுடிகளிடமிருந்து வீட்டை மீட்டு தர கோரிக்கை
x
தினத்தந்தி 16 Oct 2017 8:00 AM IST (Updated: 16 Oct 2017 1:26 AM IST)
t-max-icont-min-icon

நீதான் ராஜா என்ற படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்து உள்ளவர் நிரஞ்சன்.

சென்னை,

மன்னாதி மன்னன் என்ற திரைப்படத்தையும் தயாரித்து இயக்கி, நடித்தும் வருகிறார். இவர் கதாநாயகனாக நடித்துள்ள ஒத்தையடி வீரன் என்ற திரைப்படம் ஏற்கனவே வெளிவந்துள்ளது.

இவர் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் வசிக்கிறார். நேற்று இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான், எனது சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளேன். அந்த வீட்டில் வாடகைக்கு இருப்பவர் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை, கிரிக்கெட் சூதாட்டம் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகிறார். இதனால் அவரை வீட்டை காலி செய்ய சொன்னேன். வீட்டை காலி செய்ய மறுத்து ரவுடிகள் மூலம் என்னை மிரட்டுகிறார்.

இதுதொடர்பாக ராயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரவுடிகள் துணையோடு எனது வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் காலி செய்ய மறுக்கிறார். வீட்டை மீட்டு தருவதோடு எனக்கு உரிய பாதுகாப்பை வழங்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் கூறியிருக்கிறார்.

Next Story