பாலாற்றில் குடிநீர் குழாயில் பாதிப்பு: மாநகராட்சி, 7 நகராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்


பாலாற்றில் குடிநீர் குழாயில் பாதிப்பு: மாநகராட்சி, 7 நகராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x
தினத்தந்தி 16 Oct 2017 4:15 AM IST (Updated: 16 Oct 2017 3:21 AM IST)
t-max-icont-min-icon

பச்சகுப்பம் பாலாற்றில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் வேலூர் மாநகராட்சி, 7 நகராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆம்பூர்,

பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆம்பூர் அருகே உள்ள பச்சகுப்பம் பாலாற்றில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாநகராட்சி மற்றும் பேரணாம்பட்டு, குடியாத்தம், மேல்விஷாரம், ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை, அரக்கோணம் ஆகிய 7 நகராட்சி, ஒடுகத்தூர், பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் காவிரி குடிநீர் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் காவிரி குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

பாலாற்று வெள்ளத்தால் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் வினியோகம் பாதிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்கு னர் சி.என்.மகேஸ்வரன் நேற்று காலை பச்சகுப்பம் பகுதிக்கு வந்து சேதமடைந் துள்ள பகுதிகளை பார்வை யிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை எப்போது தொடங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பச்ச குப்பம் பாலாற்றில் குடிநீர் குழாயில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, 7 நகராட்சி மற்றும் அதனை யொட்டி யுள்ள ஊராட்சி பகுதிகள், பேரூராட்சி பகுதிகளில் காவிரி குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களில் கிடைக்கும் குடிநீரை தற்காலிகமாக அப்பகுதி மக்களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது. அதுவரை பொதுமக்கள் கிடைக்கும் குடிநீரை சிக்கனமாக பயன் படுத்த வேண்டும்.

தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழையால் குடிநீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இல்லை. குடிநீர் வடிகால் வாரியத்தின் குடிநீர் குழாயில் பாதிப்பு, உடைப்பு ஏதேனும் ஏற்பட்டால் மாவட்ட கலெக்டர் அல்லது அந்தந்த பகுதிகளில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம்.

பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்கு வதே எங்களுடைய கடமை. குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க விடுமுறை நாட்களிலும் பணி செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் மணிவண்ணன், மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், நிர்வாக பொறியாளர்கள் கணேசன், சுந்தரம், பாண்டி யன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story