தூத்துக்குடி அருகே டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
தூத்துக்குடி அருகே டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கலெக்டர் வெங்கடேஷ் நேற்று காலை நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட குமாரகிரி, நடு கூட்டுடன்காடு ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. புதுக்கோட்டை, முடிவைத்தானேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த மருத்துவ பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டெங்கு கொசுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். கொசுமருந்துகளையும் தெளித்தனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த பணிகளை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதிதாக கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் டெங்கு கொசுக்கள் உருவாகாமல் தடுக்க அறிவுறுத்தினார். அனைத்து பகுதிகளிலும் மருந்து தெளிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, யூனியன் ஆணையாளர் இசக்கியப்பன், வட்டார மருத்துவ அலுவலர் நந்திகேசுவரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராஜன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமிராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story