பொங்கலூர் அருகே பரிதாபம்: பி.ஏ.பி.கால்வாய்க்குள் கார் பாய்ந்து கோவை என்ஜினீயர்கள் 3 பேர் பலி
பொங்கலூர் அருகே பி.ஏ.பி.கால்வாய்க்குள் கார் பாய்ந்து கோவை சிவில் என்ஜினீயர்கள் 3 பேர் பலியானார்கள். தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மற்றொருவரின் கதி என்ன? என்று தெரியவில்லை. தீயணைப்பு வீரர்கள் அவரை தேடி வருகிறார்கள்.
பொங்கலூர்,
கோவை வீரகேரளத்தை சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவருடைய மகன் மாரியப்பன் (வயது 30). இவர் கோவை ஷோபா டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இந்த நிறுவனத்தில் கோவை தொண்டமுத்தூர் சுண்டப்பாளையத்தை சேர்ந்த விஜயன் (35), கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்த பிரதீஷ் (34), இதே பகுதியை சேர்ந்த சுதாகர் (29) ஆகியோரும் சிவில் என்ஜினீயராக வேலை செய்து வந்தனர். மேலும் இந்த நிறுவனத்தில் சுண்டப்பாளையத்தை சேர்ந்த அன்பழகன் (35) என்பவரும் வேலை செய்து வருகிறார். இவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள்.
ஷோபா டெவலப்பர்ஸ் நிறுவனம் சார்பில் மொத்தம் 45 பேர் கொடைக்கானலுக்கு செல்ல முடிவு செய்து இருந்தனர். அதில் 40 பேர் 2 வேன்களில் கொடைக்கானலுக்கு 13-ந்தேதி சென்றனர். மாரியப்பனுக்கு சொந்தமான காரில் விஜயன், பிரதீஷ், சுதாகர் மற்றும் அன்பழகன் ஆகியோர் மட்டும் தனியாக கோவையில் இருந்து கொடைக்கானலுக்கு சென்றனர். அங்கு ஷோபா டெவலப்பர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தங்கும் விடுதியில் தங்கி பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். பின்னர் நேற்று மதியம் கொடைக்கானலில் இருந்து கோவைக்கு அதே காரில் திரும்பினார்கள்.
காரை மாரியப்பன் ஓட்டினார். முன் இருக்கையில் விஜயன் அமர்ந்து இருந்தார். காரின் பின் இருக்கையில் பிரதீஷ், சுதாகர், அன்பழகன் ஆகியோர் அமர்ந்து இருந்தனர். இந்த கார் திருப்பூர் மாவட்டம் குண்டடம்-கோவை சாலையில் கள்ளிப்பாளையம் அருகே நேற்று இரவு 7.30 மணிக்கு வந்து கொண்டிருந்தது.
கள்ளிப்பாளையம் அருகே குண்டடம்-கோவை சாலையின் குறுக்காக பி.ஏ.பி. கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் 15 அடி அகலம் கொண்டது. 20 அடி ஆழம் கொண்டது. திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் இந்த கால்வாயில் 7 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் கால்வாய் அருகே இவர்களுடைய கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி சென்று கால்வாய்க்குள் திடீரென்று பாய்ந்தது. அப்போது காரில் இருந்தவர்கள் அபயக்குரல் எழுப்பினார்கள்.
அதற்குள் கார் கால்வாய் தண்ணீருக்குள் மூழ்கி சிறிது தூரம் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டது. காருக்குள் இருந்தவர்களின் அபயக்குரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று காருக்குள் இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் காரின் கண்ணாடி லாக் ஆகி விட்டதால், அவர்களை காப்பாற்ற முடியவில்லை. எனவே காரின் கண்ணாடியை உடைத்து காருக்குள் இருந்த அன்பழகன் என்பவரை உயிருடன் மீட்டனர். மற்றவர்களை மீட்க முடியவில்லை. இதையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கும், பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே போலீசாரும், தீயணைப்பு படைவீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த இடம் இருட்டாக இருந்ததால், டார்ச் லைட் வெளிச்சத்துடன் கயிறு கட்டி, காரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது காருக்குள் மாரியப்பன், விஜயன், பிரதீஷ் ஆகியோர் பிணமாக கிடந்தனர். சுதாகரை காருக்குள் காணவில்லை. தண்ணீரில் அவர் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கால்வாய் செல்லும் வழியே போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் டார்ச் லைட் மூலம் சுதாகரை தேடி வருகிறார்கள். எனவே சுதாகரின் கதி என்ன? என்று தெரியவில்லை. மேலும் கால்வாய் கரைகளில் புதர்கள் மண்டிக்கிடப்பதால், சுதாகரை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கார் கால்வாய்க்குள் பாய்ந்த பிறகு காரில் இருந்து காணாமல் போன சுதாகரை தேடும் பணியை இன்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் தொடர தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் முடிவு செய்துள்ளனர். கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று ஊருக்கு திரும்பும்போது கார் தண்ணீருக்குள் பாய்ந்து சிவில் என்ஜினீயர் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story