டெங்கு ஆய்வுக்காக வந்த மத்தியக்குழு தமிழக அரசை பாதுகாத்து பேசி இருப்பது ஏற்புடையது அல்ல
டெங்கு ஆய்வுக்காக வந்த மத்தியக்குழு தமிழக அரசை பாதுகாத்து பேசி இருப்பது ஏற்புடையது அல்ல என்று ஜி.கே.வாசன் கூறினார்.
திருச்சி,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெங்கு காய்ச்சலால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. டெங்கு குறித்த அச்சமும், பீதியும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பொதுமக்களிடம் நிலவி வருகிறது. இந்தநிலையில் தமிழகம் வந்துள்ள மத்திய ஆய்வுக்குழு தமிழகத்தில் டெங்கு குறித்த உரிய ஆய்வினை மேற்கொள்ளாமல் தமிழக அரசை பாதுகாத்து பேசி இருப்பது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல. எனவே தமிழக அரசு விழித்து கொள்ள வேண்டும்.
சுகாதார பிரச்சினை உயிர் பிரச்சினை. இதில் 100 சதவீத கவனம் செலுத்தி மக்களுக்கு நம்பிக்கை தந்து டெங்குவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகளை அரசு மறைப்பது வேதனை அளிக்கிறது. டெங்குவால் உயிரிழந்தவர்கள் குறித்து உரிய கணக் கெடுப்பு நடத்தி அவர்களுடைய குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story