காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க போதிய டாக்டர்கள் நியமிக்க கோரிக்கை


காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க போதிய டாக்டர்கள் நியமிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 16 Oct 2017 4:14 AM IST (Updated: 16 Oct 2017 4:14 AM IST)
t-max-icont-min-icon

பேரையூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க போதிய அளவில் டாக்டர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரையூர்,

பேரையூர் அரசு மருத்துவமனையில் 30 படுக்கை அறை வசதியுள்ளது. இங்கு சிகிச்சை பெற பேரையூரை சுற்றியுள்ள கிராமமக்கள் வருகின்றனர். இந்த மருத்துவமனையில் 7 டாக்டர்கள் இருக்க வேண்டும்.

ஆனால் தற்போது 3 டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். குறைவான டாக்டர்களை வைத்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை.

தற்போது பேரையூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் காய்ச்சலால் அதிக அளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் இந்த மருத்துவமனைக்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 3 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு முதலுதவி அளித்து, அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து, பின்பு அதற்கான சிகிச்சைகளை இந்த 3 டாக்டர்கள் மட்டுமே செய்து வருகின்றனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ரத்தமாதிரி எடுத்து ரத்த அணுக்கள், குறைவாக இருப்பவர்கள் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.

இதனால் நோயாளிகள் டாக்டர்களிடம் சிகிச்சை பெறுவதற்காக மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். பேரையூர் தாலுகா மருத்துவனைக்கென்று நியமனம் செய்யப்பட்ட 7 டாக்டர்கள் இங்கு பணி புரிந்தால், இங்கு வரும் நோயாளிகள் நிம்மதியாக சிகிச்சை பெற்று செல்வார்கள். ஆகையால் பேரையூர் அரசு மருத்துவமனைக்கு போதிய அளவில் டாக்டர்களை நியமிக்கவேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story