செல்லப்பிராணிகளின் ஆரோக்கியத்தை அறிய...
செல்லப்பிராணிகளின் ஆரோக்கியத்தை அளவிட வந்திருக்கிறது ‘பிரிங்கி’ எனப்படும் ஸ்மார்ட் பந்து.
நமது உடல் நலத்தை அளவிட இன்று ‘பிட்னஸ் டிராக்கர்’ எனப்படும் பல்வேறு கருவிகள் வந்துவிட்டன. அதுபோல செல்லப்பிராணிகளின் ஆரோக்கியத்தை அளவிட வந்திருக்கிறது ‘பிரிங்கி’ எனப்படும் ஸ்மார்ட் பந்து. கிக்ஸ்டார்ட்டர் நிறுவனம் விற்பனை செய்யும் இந்த பந்திற்குள் சென்சார் கருவிகள் இணைக்கப்பட்டிருக்கும். நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் இதை உருட்டி விளையாடும்போலு பால் உருண்டு செல்லும் தொலைவு, அதை நாய் திரும்ப வந்து எடுக்கும் கால அளவு, பந்தை முகத்தால் தட்டி உருட்டும் வேகம் ஆகியவற்றின் கால அளவை கண்காணித்து, பிராணிகளின் வேகம், சுறுசுறுப்பை கணிக்கிறது இந்த பந்து. இதை செல்போனில் அறிந்து கொள்ளும் நாம், செல்லப்பிராணியின் சுறுசுறுப்பில் குறைவிருந்தால் மருத்துவரை நாடலாம்.
Related Tags :
Next Story