காயாமொழியில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு தினம் அனுசரிப்பு இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை
காயாமொழியில் பா.ராமச்சந்திரனார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
திருச்செந்தூர்,
காயாமொழியில் பா.ராமச்சந்திரனார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி காயாமொழியில் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் உருவ சிலைக்கு இரா. கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
4–ம் ஆண்டு நினைவு தினம்‘மாலை முரசு‘ நிர்வாக ஆசிரியர் மறைந்த பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 4–ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவர் பிறந்த ஊரான திருச்செந்தூர் அருகே காயாமொழியில் உள்ள அவரது நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு ‘மாலை முரசு‘ நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மணிமண்டப வளாகத்தில் உள்ள ராமச்சந்திர ஆதித்தனார் திருமண மண்டபத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம், வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது. விஜயசிங் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
கலந்து கொண்டோர்இந்த நிகழ்ச்சியில் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், தையல் சுப்பிரமணிய ஆதித்தன், தையல்பாகு ஆதித்தன், எஸ்.எஸ்.ஆதித்தன், அசோக் ஆதித்தன், குமரேச ஆதித்தன், ஜெயகுமார் ஆதித்தன், சுந்தரகுமார ஆதித்தன், வரதராஜ் ஆதித்தன், தங்கேச ஆதித்தன், சுப்பிரமணிய ஆதித்தன், விக்கிரம ஆதித்தன், ராகவ ஆதித்தன், பத்மநாப ஆதித்தன், ராமானந்த ஆதித்தன்,
பா.ஜ.க. விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், சென்னை வில்லிவாக்கம் தொகுதி செயலாளர் பாலாஜி, ஒன்றிய பொதுச்செயலாளர் சுந்தர், தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் அமிர்தலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வெங்கடேஷ், தூத்துக்குடி அனைத்து நாடார் நலச்சங்க தலைவர் மனோகர், செயலாளர் அந்தோணி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.