அடுத்த மாதம் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பந்தல் அமைக்கும் பணிக்கு கால்கோள் நாட்டு விழா


அடுத்த மாதம் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பந்தல் அமைக்கும் பணிக்கு கால்கோள் நாட்டு விழா
x
தினத்தந்தி 17 Oct 2017 2:30 AM IST (Updated: 16 Oct 2017 6:54 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் அடுத்த மாதம்(நவம்பர்) 12–ந் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு பந்தல் அமைக்கும் பணிக்கான கால்கோள் நாட்டு விழா நேற்று நடந்தது.

நெல்லை,

நெல்லையில் அடுத்த மாதம்(நவம்பர்) 12–ந் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு பந்தல் அமைக்கும் பணிக்கான கால்கோள் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் 4 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

கால்கோள் நாட்டு விழா

தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அடுத்த மாதம்(நவம்பர்) 12–ந் தேதி விழா நடக்கிறது. பாளையங்கோட்டை கோர்ட்டு அருகில் உள்ள பெல் மைதானத்தில் நடைபெறும் இந்த விழா பந்தல் அமைக்கும் பணிகளுக்கான பூஜை மற்றும் கால்கோள் நாட்டு விழா நேற்று நடந்தது.

முதலில் நெல்லையப்பர் கோவில் அர்ச்சகர்களை கொண்டு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, மணிகண்டன், ராஜலட்சுமி ஆகியோர் பந்தல் காலை நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தனர்.

எம்.பி.–எம்.எல்.ஏ.க்கள்

விழாவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி, எம்.பி.க்கள் கே.ஆர்.பி.பிரபாகரன், எஸ்.முத்துக்கருப்பன், வசந்தி முருகேசன், எம்.எல்.ஏ.க்கள் முருகையாபாண்டியன், செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, முதன்மை கல்வி அலுவலர் தனமணி, தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணைய தலைவர் சக்திவேல் முருகன், மாநில கூட்டுறவு இணைய துணைத்தலைவர் தச்சை கணேசராஜா, முன்னாள் மேயர் புவனேசுவரி.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துசெல்வி, தர்மலிங்கம், சுப்பையாபாண்டியன், சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய துணைத் தலைவர் கண்ணன், ஆவின் தலைவர் ரமேஷ், அக்ரோ தலைவர் மகபூப்ஜான், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர்கள் ஜெரால்டு, இ.நடராஜன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பெரிய பெருமாள், பகுதி செயலாளர்கள் தச்சை மாதவன், ஹயாத், மோகன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்

இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பான முறையில் நடத்துவது குறித்து ஆலோசனை நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story