பள்ளிப்பட்டு அருகே தொழிலாளி வீட்டு காம்பவுண்டுக்குள் புகுந்த 7 அடி நீள மலைப்பாம்பு


பள்ளிப்பட்டு அருகே தொழிலாளி வீட்டு காம்பவுண்டுக்குள் புகுந்த 7 அடி நீள மலைப்பாம்பு
x
தினத்தந்தி 17 Oct 2017 4:00 AM IST (Updated: 17 Oct 2017 1:28 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொம்மராஜுப்பேட்டை கிராமம் ராஜா தெருவில் வசித்து வருபவர் செல்லாரெட்டி (வயது 30). கூலி தொழிலாளி.

பள்ளிப்பட்டு,

இவர், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வெளியே சென்று விட்டு தனது வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டின் காம்பவுண்டு சுவர் அருகே மலைப்பாம்பு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பள்ளிப்பட்டு தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் முனியப்பன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சுரேஷ், ராம்கி, நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுவர் அருகே கிடந்த 7 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.

செல்லாரெட்டி வீட்டருகே உள்ள மலைப்பகுதியில் இருந்து அந்த மலைப்பாம்பு அவரது வீட்டு காம்பவுண்டுக்குள் புகுந்து உள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பை அவர்கள் பள்ளிப்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த மலைப்பாம்பை புள்ளூர் காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.



Next Story