ஈரோடு ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஈரோடு ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ஈரோடு,
தீபாவளி பண்டிகை நாளை (புதன்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவை கொண்டாடுவதற்காக வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் தங்களது குடும்பத்துடன் ஈரோட்டிற்கு திரும்புகின்றனர். இதேபோல் ஈரோட்டில் பணியாற்றி வெளியூரை சேர்ந்தவர்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். இதனால் பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் கடந்த 2 நாட்களாக அலைமோதுகிறது. ஈரோடு ரெயில் நிலையத்திலும் பயணிகளின் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.
ரெயில்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் திருட்டு, வழிப்பறி போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க ஈரோடு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரெயில்களில் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் பட்டாசு கொண்டு செல்கிறார்களா? என்று போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் பயணிகளின் உடைமைகள் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் வெளியூரில் இருந்து ஈரோட்டிற்கு வந்த ரெயில்களிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
ஈரோடு ரெயில் நிலைய வளாகம், நடைமேடைகள், டிக்கெட் கொடுக்குமிடம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். இதேபோல் ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Tags :
Next Story