சேலம் மாநகராட்சி பகுதியில் ‘டெங்கு’ தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு முதன்மை செயலாளர் ஆய்வு
சேலம் மாநகராட்சி பகுதியில் ‘டெங்கு’ தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு முதன்மை செயலாளர் முகமது நசிமுதீன் ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
சேலம்,
சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘டெங்கு’ தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை ஆய்வு செய்வதற்காக, தமிழக அரசின் வனத்துறை அரசு முதன்மை செயலாளரும், சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான முகமது நசிமுதீன் நேற்று சேலம் வந்தார்.
சூரமங்கலம் மண்டலம் 23-வது வார்டு அம்மாசிநகர் பகுதிகளிலும், அம்மாபேட்டை மண்டலம் 39-வது வார்டு பூவாத்தார் தெரு மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலம் 46-வது வார்டு மாரியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் அரசு முதன்மை செயலாளர் முகமது நசிமுதீன் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, பொதுமக்களிடம் குடிநீர் வினியோகம் குறித்தும், மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். வீடுகளுக்குள் சென்று ஆய்வு செய்த அவர், பொதுமக்கள் தண்ணீர் தேக்கி வைத்துள்ள பாத்திரங்கள், குளிர் சாதனப்பெட்டி ஆகியவற்றை தூய்மையாக பராமரித்து வருகிறார்களா? என்பதை பார்வையிட்டார்.
மேலும் பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் எதனால் பரவுகிறது?, அதற்கு என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்? எனவும், உடல் நலம் பாதிக்கப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனை மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், சுயமருத்துவம் மேற்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தினார்.
மேலும் மாநகராட்சி நிர்வாகத்தினரால் தீவிர துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், அப்பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்து சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், வீடுகளில் உள்ள குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் போட வேண்டும் எனவும் எடுத்துரைத்தார். மாநகராட்சி பகுதிகளில் உரிய கால அளவில் குடிநீர் வழங்கப்பட்டு வருவதால், தேவைக்கேற்ப குடிநீரை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார்.
பருவநிலை மாற்றத்தினால் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தேவையற்ற பொருட்களை குடியிருப்பு பகுதிகளிலிருந்து உடனடியாக அப்புறப்படுத்திடவும், மாநகராட்சியின் டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் முதன்மை செயலாளர் முகமது நசிமுதீன் வேண்டுகோள் விடுத்தார்.
ஆய்வின்போது கலெக்டர் ரோகிணி, மாநகராட்சி ஆணையாளர் ஆர்.சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, செயற்பொறியாளர்கள் ரவி, காமராஜ், உதவி மாநகர்நல அலுவலர் (பொறுப்பு) வசந்த் திவாகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story